உலக தமிழாராட்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

நான்காவது
உலகத்தமிழராட்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம்
முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூயில் இன்று(10) மாலையில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒன்பது பேர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக

கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்கான காரணங்களாகும்.

Exit mobile version