உலக நாடுகளுக்கு அதிர்ச்சியூட்டும், ட்ரம்ப் விடுத்த அறிவிப்பு!

அமெரிக்க உயர்நீதிமன்றம், தான் முன்னர் விதித்திருந்த வரிகளை இரத்துச் செய்து தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது புதிதாக சர்வதேச ரீதியில் 10 சதவீத வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வெள்ளை மாளிகையில், செய்தியாளர் சந்திப்பை நடாத்திய அமெரிக்க ஜனாதிபதி, இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரிவு 122 இன் கீழ் இந்தப் 10 சதவீத மேலதிக வரியை விதிக்கும் ஆவணத்தில் தான் கையெழுத்து இடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனைய நாடுகள் மற்றும் நிறுவனங்களின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க பிரிவு 301 உள்ளிட்ட பிரிவுகள் குறித்தும் ஆய்வுகளை நடத்தவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகமான சுங்க வரிகள் சட்டவிரோதமானவை என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேலும், ட்ரம்ப் தனது நிர்வாக அதிகார வரம்பை மீறி செயற் பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்தநிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version