எமது நாட்டின் பண்பாடு உலகிற்கு எமது நாட்டை அடையாளப்படுத்திக் காட்டுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள, தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.
பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ்x புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்பாட்டுப் பகிர்வு உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.
மலர்ந்திருக்கும் தமிழ் – சிங்கள புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாய் அமையட்டும் ” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதை குழியை நாளை பார்வையிடவுள்ளது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!
தற்போது பதவியிலுள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மட்டும் நீடிப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு!
கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!