ஈரான் மீதான போர் உலகளாவிய சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டு எரிசக்தி விலைகள் 24 சதவீதம் வரை உயரக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
2022 இல் ரஷ்யா – யுக்ரைன் போருக்குப் பிறகு ஏற்படும் மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி மற்றும் உரங்களின் விலை உயர்வு காரணமாக, 2026 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொருட்களின் விலைகள் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025இல் சராசரியாக 69 டொலராக இருந்த பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை, 2026இல் 86 டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகளாவிய கடல்வழி மசகு எண்ணெய் வர்த்தகத்தில் 35 சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடைகள், வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களால், ஆரம்பகட்டத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 10 மில்லியன் பீப்பாய்கள் வரை குறைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
தற்போதைய போர்ச் சூழல் மற்றும் போக்குவரத்துத் தடைகள் மே மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்றும், ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து 2026 இறுதிக்குள் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.

ஊழல் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் மற்றும், உயிரத்த ஞாயிறு தாக்குதல் குற்ற சாட்டுகளில் தப்பிப்பதற்காகவே எதிர் கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் குற்றம் சாட்டினார்.
மீசாலையில் ஜனாதிபதி அடிக்கல்நாட்டிய வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் 17 மாலுகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்!