2006 ஆம் ஆண்டு திருகோணமலை மூதூரில் இடம்பெற்ற தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலையின் 20வது ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில், மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (08) இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது உயிரிழந்த 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றும் சுடர் ஏற்றி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்தநிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ நேசன், வைத்தியர் ஸ்ரீநாத் மற்றும் வேலன் சுவாமிகள், இந்து மத தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!