யாழ்ப்பாணம், தென்மராட்சி கொடிகாமம், ஏ9 வீதி, மீசாலை புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(06) நண்பகலில் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



வேம்பிராயிலிருந்து ஏ9 வீதி, புத்தூர் சந்தியில் ஏற முற்பட்ட உழவு இயந்திரமும், சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம், நோக்கி பயணித்த மோட்டார்ச் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின.
சம்பவத்தில் காயமடைந்த பெண், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குருக்கள்மடம் சந்தேக மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணி ஆரம்பம்!
தென்மராட்சி பிரதேச பண்பாட்டு விழா!
சுவிட்சர்லாந்து – இலங்கை நட்புறவின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாயாழ்ப்பாணத்தில்!
நன்னடத்தை பாதுகாவல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் நியமனம்!