யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 8 ஆவது வாரமாக இன்றும் (09) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என காணிகளை இழந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும், பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும், மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமது காணிகளை விடுவிப்பதற்கான உறுதியான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
பலாலியில் இராணுவத்துன் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரி காணிகளை இழந்த மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!
மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்!
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்!
சிரந்தி ராஜபக்சவிற்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!