கட்டுநாயக்கவில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று(05) அதிகாலை 12.50 மணியளவில் வருகை தந்த விமானம் மூலம், இலங்கையை வந்தடைந்தவரே குஷ் போதைப்பொருளை கொண்டுவந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், “10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சுமார் ஒரு கிலோகிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் பொதிகள் செய்யப்பட்டுச் சந்தேகநபரின் பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதன் சந்தைப் பெறுமதி பத்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பிலுள்ள அபாயகரமான மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version