யாழ்.தென்மராட்சி கொடிகாமம், கச்சாய்வீதி, ஆத்தியடி வீதியில்
குடிகொண்டுள்ள பசுக்கேணி அருள்மிகு ஸ்ரீ பரமசிவன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 22 ஆம் திகதி, நாளை மறுதினம் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.


20 ஆம் திகதி இன்று காலை 9.10 மணியளவில் விநாயகர் வழிபாடுடன் ஆரம்பித்து மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ரக்க்ஷோக்ன ஹோமம், திசா ஹோமம் ஆகியன இடம்பெற்று, மாலை விநாயகர் வழிபாடோடு, முதலாம் கால பூஜைகள், திருமுறைகள் பாராயணம் செய்தல் ஆகியன இடம் பெறவுள்ளன.
21ஆம் திகதி நாளை காலை 8 மணி முதல் மாலை 5.00 மணிவரை எண்ணெய் காப்பு வைக்கும் நிகழ்வு இடம்பெவுள்ளது.


22 ஆம் திகதி நாளை மறுதினம் அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடோடு ஆரம்பித்து காலை 6.1 மணி தொடக்கம் 7.30 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!