சமரசம் பேச இஸ்ரேல் செல்கிறார் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்!

லெபனானில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் இஸ்ரேலுக்கு இன்று (20) அவசர பயணம் மேற்கொள்கிறார்.

லெபனானுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, திட்டமிடப்படாத இந்த அதிரடிப் பயணத்தை அவர் மேற்கொள்வதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபனானில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து போர் நிறுத்தத்தை உறுதி செய்தல்,

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிப்பது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல்,

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குதல், தொடர்பான விடயங்களை ஆராய்வதே இந்தப் பயணத்தின் நோக்கங்களாக அமைந்துள்ளன.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான நேரடிப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பாரிய மோதல் இடம்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளிலேயே லெபனானுடன் நெருங்கிய வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ள பிரான்ஸ், இந்த விவகாரத்தில் சமரச முயற்சியாளராக முன்னின்று செயல்பட்டு வருகின்றது

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version