ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் 14ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் தொடரில், இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
குழுநிலைப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, 100-34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.
திஷாலா அல்கம தலைமையிலான இலங்கை அணி, போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி, நான்கு சுற்றுகளையும் கைப்பற்றியது.
இதன் மூலம் 66 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை, அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, நொக்-அவுட் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது.
இலங்கை அணி தனது அடுத்த குழுநிலைப் போட்டியில் மாலைதீவு அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதனிடையே, மற்றொரு போட்டியில் நடப்பு சம்பியனான சிங்கப்பூர் அணியை 56-42 என்ற புள்ளிக் கணக்கில் மலேசிய அணி வீழ்த்தியது.

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வேண்டுகோள்!
சிரந்தி ராஜபக்சவிற்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!