சாவகச்சேரி நகராட்சி மன்றமும்,சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றமும் இணைந்து நடாத்திய தைப் பொங்கல் விழா சாவகச்சேரி நகராட்சிமன்ற பொது மைதானத்தில் நேற்று (31) சிறப்பாக இடம்பெற்றது.

பொங்கல் நிகழ்வில், சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், கிறீஸ்மரம் ஏறுதல், முட்டி உடைத்தல், கபடி, கிளித்தட்டு மற்றும் பொங்கல் போட்டி என காலை முதல் மாலை வரை பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில், சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்ற தலைவர் கலாநிதி முத்துக்குமாரசாமி அகிலன், செயலாளர் கோகுலன், சாவகச்சேரி நகரசபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ், உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்ததோடு, வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.


வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!