யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வின் நிர்வாக ரீதியான செயல்பாடுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல் சிந்துப்பாத்தி மயான வளாகத்தில் திறந்த நீதிமன்ற அமர்வாக நேற்று(05) இடம்பெற்றது.
நீதவான் லெனின்குமார் முன்னிலையில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அமர்வு இடம்பெற்றது.
இந்த அமர்வில் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது DPR ரோடார் பயன்படுத்தப்பட்ட ஆய்வறிக்கையையும், அகழ்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் தொடர்பான முழுமையான அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதியோடு நிறைவடையவுள்ள நிலையில், அகழ்வுப் பணி தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஓக்டோபர் மாதம் 14 திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அகழ்தெடுக்கப்பட்ட சான்றுப்பொருட்களின் கட்டுக்காவல் உறுதிப்படுத்தலை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியில் புதிதாக 8 என்பு கூடுகள் நேற்றைய தினம் (05) அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக் கூடுகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 44 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன.
அதற்கமைய நேற்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக் கூடுகளோடு இதுவரை மொத்தமாக 489 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 491 என்புக் கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
இந்திய மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் விபத்து!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!
சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளர் பதவி வழக்கு, 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!