இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் (Julie Chung)க்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியற்றிய ஜூலி சாங்,தனது சேவையை நிறைவு செய்து எதிர்வரும் 16 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
இந்த நிலையில் இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜூலி சாங், தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட பங்களிப்பிற்கும் ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது!
வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
முந்தல் விபத்தில் மூவர் பலி: 10 பேர் படுகாயம்!
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் கோர விபத்து!