தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையும், தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளும் நெருக்கமான உறவுகளையும், வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் நிலையில், நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
வலுவான இந்திய – இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயல்படுவதன் மூலம்,மேலான செழிப்பையும் முன்னேற்றத்தை அடைவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்களுக்கும், தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!
பணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
வெல்லே சாரங்க துயாயில் கைது!