திருகோணமலை , ஈச்சிலம்பற்று, சல்லி கடற்கரையில் டொல்பினொன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த டொல்பின் இன்று(06) காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்ட சிறிய டொல்பின் என தெரியவருகிறது.
மேலும், மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கி பின்னர் கடற்றொழிலாளர்களால் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பினை அப்புறப்படுத்தியுள்ளனர்.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!