திருகோணமலை -கிண்ணியா- கங்கை பாலத்தருகில் தனியார் பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த 23 பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!
தென்மராட்சி பிரதேச பண்பாட்டு விழா!
சுவிட்சர்லாந்து – இலங்கை நட்புறவின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாயாழ்ப்பாணத்தில்!
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!