திருக் கார்த்திகை விளக்கீடு என அழைக்கப்படும் திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வு இல்லங்களிலும், ஆலயங்களிலும் இன்று (04) சிறப்பாக இடம்பெற்றன.
முருகன் ஆலயங்களில் நேற்றைய தினமும்,ஏனைய ஆலயங்கள் மற்றும் இல்லங்களில் இன்றைய தினமும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டன.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல ஆண்டுகள் போரிட்டனர்.
சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றி அந்த சோதிப்பிழம்பின் அடியையும் முடியையும் தேடும்படி அசரீரியாக கூறினார். இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க சிவபெருமான் திருக்கார்த்திகை நாளன்று காட்டியருளினார்.
இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு என்பது ஐதீகமாகும்.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!