
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்லாது, நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அத்துடன், அரச அதிகாரம் மற்றும் சுயாதீன அரச நிறுவனங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள கட்சி, அவை அரசியல் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டவை என தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பாரிய மக்கள் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை மூலம் தமது கட்சியை அச்சுறுத்த முடியாது என்றும், மாறாக தமது அரசியல் சக்தியை மேலும் வலுப்படுத்தும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!