யாழ். கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் ஹனிதும சுனில் செனவி!

பெளத்த சாசன அமைச்சர் ஹனிதும சுனில் செனவி, யாழ்ப்பாணம் கோட்டையில் இடம்பெற்றுவரும் புனர்நிர்மாணப் பணிகளை இன்று (06) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, கோட்டையில் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகள் அமைச்சருக்கு விரிவாக விளக்கமளித்தனர்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டோரும் அமைச்சருடன் இணைந்து கலந்துகொண்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version