எரிபொருளின் விலைகள் நேற்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெற்றோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

செம்மணி மனித புதை குழியை நாளை பார்வையிடவுள்ளது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!
தற்போது பதவியிலுள்ள நீதியரசர்களின் பதவிக்காலத்தை மட்டும் நீடிப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு!
கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!