ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் ஏனைய முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்கா – இஸ்ரேல் ஆகிய நாடுகள் பரவலாக தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குள்ள இராணுவ தளங்கள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடாத்திவருகிறது.
பஹ்ரைனிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் முக்கிய கட்டளை தலைமையகம் ஈரானின் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத்திலுள்ள அமெரிக்க தூதரகம் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியிலுள்ள அமெரிக்க தூதரகம் டிரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
ஜோர்டானில் அமெரிக்க தூதரகப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கிலுள்ள தனது குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்நிலையில், ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு ‘விரைவில்’ பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.



