புலம்பெயர முயன்ற 1300 ற்கும் அதிகமானோர் கடந்த ஐந்து மாதங்களில் கடலில் பலி!

ஆபிரிக்காவிலிருந்து கடல் வழியாக ஸ்பெயின் நாட்டு கடற்கரையை அடைய முயன்ற 1,300 ற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

புலம்பெயர்வோரைக் கண்காணித்து வரும் ‘காமினாண்டோ ஃப்ரோன்டெராஸ்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நேற்று(10) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் ஸ்பெயின் கரையை அடைய முயன்றவர்களில் 142 பெண்கள் மற்றும் 129 குழந்தைகள் உட்பட மொத்தமாக ஆயிரத்து 317 பேர் கடலில் மூழ்கியும், கடுமையான பயணச் சூழல்களாலும் உயிரிழந்துள்ளனர்.

இதில் புலம்பெயர்ந்தோரை ஏற்றுச் சென்ற 27 படகுகள் நடுவழியில் காணாமல் போயுள்ளதாகவும் அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version