யாழ்ப்பாணம் மண்டைதீவு புதைகுழி வழக்கு, பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதால் மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு யாழ்.ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் அனீபா றஜீவ் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தமது சான்றுகளை சமர்ப்பித்ததோடு மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் கோரினர்.

இதேநேரம் கடந்த ஜூலை 28ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடம் தொடர்பான சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இருந்தும் மீண்டும் பொலிஸார் இன்றும் கால அவகாசம் கோரியிருந்தனர்.
இந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு நீதவான் அனீபா றஜீவ் தவணையிட்டார்.

இன்றைய விசாரணையின்போது வழக்காளிகள் சார்பாக, சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்னபெலினா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சார்பாக சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற டிப்பர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது: இரு டிப்பர்கள் கைப்பற்றல்!
13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!