அநுராதபுரம் – மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி ஒருவர் என தெரியவந்துள்ளது.
குறித்த விவசாயி துப்பாக்கி சூட்டிற்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்க சென்றபோது இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.
விவசாயி கரம்பன்குளம் வனப்பகுதிக்கு அருகில் மருதாணி பயிரிட்டு வந்த நிலையில், விவசாய நோக்கங்களுக்காக வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!