பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தார் நீர்நிலையில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(27) மாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும், தெரியவருவதாவது,
அனர்த்தால் சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு A 35 வீதியில் அமைந்துள்ள பாலம், இந்திய இராணுவத்தால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து விடப்பட்டது.
பாதையை புனரமைப்பதற்காக தற்காலிகமாக இடப்பட்ட வீதியால் பயணித்து பாலத்தின் கீழ்பகுதியில், மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோதே குறித்த குடும்பஸ்தர் நீர் நிலையில் தவறிவீழ்ந்துள்ளார்.
அதனையடுத்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து நேற்றிரவு 11.00 மணியளவில் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
புளியம்பொக்கணை – பெரியகுளத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!