மின் கம்பத்தோடு மோதுண்டு அம்பியூலன்ஸ் விபத்து: இருவர் காயம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்கம்பத்தோடு அம்பியூலன்ஸ் வண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

விபத்தில், அம்பியூலன்ஸ் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி பயணித் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version