முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று(29) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி, ஊவா மாகாண சபை தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பாகவே இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அன்றைய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பாஷ்வர குணரத்ன, முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரையே கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசந்த அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் இவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசேட மனு ஒன்றினூடாக இன்று கோட்டை நீதவானிடம் தெரிவித்தனர்.
அதனையடுத்தே நீதவான் பசந்த அமரசேன இந்த கைது உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!