இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பெண்ணிய அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் குரல்கொடுத்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றன.

இருந்தாலும் ஆங்காங்கே பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான அடக்கு முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் இடம்பெறத்தான் செய்கின்றன.
நீதித்துறையும் அதற்கான தண்டனைகளையும் வழங்கித்தான் வருகின்றன. ஆனால் குற்றச் செயல்கள் குறைந்தபாடாக இல்லை.

இந்த நிலையில்,14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளம் குடும்பஸ்தரான குற்றவாளிக்கு கல்முனை மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜயராம் ரொக்ஸி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அதன் தீர்ப்பு கடந்த 02 ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸியின் தீர்ப்பை கல்முனை மேல் நீதிமன்ற தற்போதைய நீதிபதியாகவுள்ள அந்தோணிப்பிள்ளை யூட்சன் வாசித்து வழங்கியுள்ளார்.

மேலும், குற்றச்சாட்டுக்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், தவறும் பட்சத்தில் 6 மாதகால சாதாரண சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டஈடும், வழங்கத் தவறின் 10 வருட கடூழிய சிறத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த சிறுமி 3 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருந்த நிலையில் கர்ப்பமடைந்திருந்தார்.பின்னர் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார்.
குறித்த குற்றத்தை புரிந்தவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் 27 வயதுடைய கணவராவார் என்பதோடு, அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும் இருக்கிறார்.
“பயிரை பாதுகாக்கும் வேலியே பயிரை மேய்ந்தால் “யாரொடு நோகேன், யார் எடுத்து

ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்!
கட்டுநாயக்கவில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பாரசீகம் எங்களுடையது, எச்சரித்தது ஈரான்: வெளியேறிய அமெரிக்கா!
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கு