யாழில் சங்கிலிய மன்னனின் 407 நினைவு தினம் அனுஷ்டிப்பு!

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது நினைவு இன்று(06) யாழ் நல்லூரிலுள்ள சங்கியன் மன்னனின் உருவச் சிலையருகில் இடம்பெற்றது.

சங்கிலியன் அறக்கட்டளையின் செயலாளர் சிறீந்திரன் தலைமையில் இந்த நினைவு தின நிகழ்வு இடம்பெற்றது.

சங்கிலிய மன்னனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னனின் மனைவிமார் நீராடிய யமுனா ஏரிக்கு ஊர்வலமாக சென்று நீரோட்டிய மலர் மாலை தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாநகர ஆணையாளர் டி.வி. அரவிந்தராஜ், ஸ்ரீ சுந்தர ஆஞ்சனே ஆலய பிரதம குரு சுந்தரேஸ்வர குருக்கள், இந்து சமய பேரவை தலைவர் சக்தி கிரீபன், சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version