யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் நீரில் மூழ்கினர்.
அதனையடுத்து கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் அவர்களில் 23 பேரை மீட்டு கரை சேர்த்தனர்.
மீட்க்கப்பட்டவர்கள் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் முன்னதாக உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, காணாமல் போன இருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகிறது.
பாலைதீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை(07) இடம்பெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கு பயணித்தவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

தென்மராட்சி பிரதேச பண்பாட்டு விழா!
சுவிட்சர்லாந்து – இலங்கை நட்புறவின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாயாழ்ப்பாணத்தில்!
நன்னடத்தை பாதுகாவல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் நியமனம்!
யாழ்.வல்லை வீதிவிபத்தில் ஆலய பூசகர் பலி!