யாழ்ப்பாணத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது !

வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படகொன்றில் இரு தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன இருவரும் பயணித்த படகு கடலில் பழுதடைந்திருந்தது.

அந்தநிலையில், அவர்களை மீட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் அவர்களுக்கு உணவளித்து , அவர்களை படகுடன் இலங்கை கடற்பரப்புக்கு அழைத்து வந்து விட்டு சென்றனர்.

அதன்பின்னர் மீண்டும் அவர்களின் படகு நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு இந்தியக் கரையில் ஒதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய கடற்றொழிலாளர்கள் இருவரையும் இந்திய கடலோர காவல்துறை கைது செய்துள்ளது.

அதனையடுத்து அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கைதானவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version