யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது!

யாழ் வடமராட்சி துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைத் தேடிக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version