யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்று (09) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


அதனையடுத்து யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


தீ விபத்தால் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எரியுண்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.



யாழ்.வல்லை வீதிவிபத்தில் ஆலய பூசகர் பலி!
டில்லு குழுவினருக்கு 9 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவுதி அரேபிய மன்னருக்கு கடிதம்!
தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!