யாழ்.மருத்துவ பீடத்தில் 8 தங்கப் பதங்கள் வென்ற மாணவி!

யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே தடவையில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நேற்றைய(19) பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த அபிராமி நற்குணம் என்ற மாணவியே மருத்துவ கற்கையின் போது பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

இவர், மருத்துவப் படிப்பின் சத்திரசிகிச்சை, மகப்பேற்றியல் மற்றும் குழந்தை மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் விசேட சித்தி மற்றும் மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவியாக தெரிவாகி 8 பதங்கங்களைப் பெற்றுள்ளார்.

இவருக்கான பட்டமும்,தங்கப் பதங்கங்களும் நேற்றைய பட்டமளிப்பின்போது வழங்கி வைக்கப்பட்டன.

https://www.facebook.com/share/p/1AxhPRwdVy

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version