வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!

காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் அதன் உறுமத்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக 5 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றதாக பதிவாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதைனையடுத்து பதிவாளரை கைது செய்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.

இதன்போது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version