உள்நாட்டுகுற்றவியல்

பெக்கோ சமனின் கைப்பேசியில், நாமல் சேர் , ராஜபக்‌ஷ சேர்! – வெளிப்படுத்திய பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க!

இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன் என்ற பாதாள உலகக் கும்பல் பிரதிநிதியின் கைப்பேசியில்,நாமல் சேர், என்றும் ராஜபக்‌ஷ சேர் என்றும் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க சபையில் வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று(23) உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.

ஆனால், இந்த நாமலும் அந்த நாமலும் ஒன்றா அல்லது இந்த ராஜபக்ஷவும் அந்த ராஜபக்ஷவும் ஒன்றா என்பது தெரியவில்லை. விசாரணைகளில் உண்மை வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாக்காது என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button