காசிநாதன் விமலநாதனின் ‘பஜனாமிர்தம்’ தொகுப்பு நூல் வெளியீடும், ‘இனிய தமிழ் கற்போம், இந்து சமயம் அறிவோம்’ நூல் அறிமுக விழாவும் யாழ்.தென்மராட்சி மீசாலையில் அமைந்துள்ள பரமேஸ்வரி மணி மண்டபத்தில் இன்று (01) இடம்பெற்றது.


தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், மீசாலை கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலய தலைவருமான க.ரஜனிகாந்தன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.


பிரதம விருந்தினராக நீதி அமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழுவின் பயிற்றுநர் பரமானந்தசர்மா சனாதனசர்மா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு ஆசிரிய வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளர் சி.இளந்திரையன், அகில இலங்கை அர்ச்சகர் குருமார் சபைத் தலைவரும், யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவருமான க.கிருபானந்தக் குருக்கள், உலக சுகாதார நிறுவன ஆலோசகரும், நீர்ப்பாசனத் திணைக்கள ஓய்வு நிலை படவரை வல்லுநருமான ஆ.சி.கா.ரகுநாதன், தென்மராட்சி கல்வி வலய சங்கீத பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் புனிதகுமாரி ஈழநேசன்,


கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி நடன ஆசிரியர் விமலகுமாரி ஸ்ரீரவிகுலன், தும்பளை கம்புருவளை சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு வே.தியானந்தராஜக் குருக்கள், மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலய பிரதமகுரு சிவ. அகிலேஸ்வரக் குருக்கள்,


கந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு ப.ஜெயகுமாரக்குருக்கள், மீசாலை மேற்கு கரும்பு மாவடிக் கந்தன் ஆலய பிரதமகுரு கு.கஜேந்திரக் குருக்கள், சாவகச்சேரி ஆதிசிவன் வீரபத்திரேஸ்வரர் ஆலய குரு வி.பாலகுமாரக் குருக்கள்,
மீசாலை மேற்கு கரும்பு மாவடிக் கந்தன் ஆலய முன்னைநாள் பிரதம குரு வே.சண்முகராஜக் குருக்கள், மணங்குணாய் வீரகத்தி விநாயகர் ஆலய பிரதமகுரு கு.ரிஷாங்க குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க.முருகதாஸ் நூல் மதிப்பீட்டுரையை நிகழ்த்தினார்.
நிகழ்வில்,பிரதம விருந்தினர் நூலை வெளியிட்டு வைக்க, தொழிலதிபர் கந்தையா துரைராசா முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.


நிகழ்வில்,பாடசாலை மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு வழங்கப்பட்டதோடு, கலை நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



