யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தால் 29,439 பேர் பாதிப்பு: 43 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 9,154 குடும்பங்களை சேர்ந்த 29,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1,196 குடும்பங்களைச் சேர்ந்த 3,825 பேர் 43 இடைத்தங்கல் முகாம்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், 5,543 குடும்பங்களை சேர்ந்த 17,428 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை 3 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில்,137 குடும்பங்களை சேர்ந்த 425 பேர் 09 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர்.


தென்மராட்சி பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர்உட்புகுந்துள்ளது.


பயிர் நிலங்கள் வெள்ளநீரால் மூடுண்டுள்ளன. ஆலயங்கள், அரச அலுவலகங்களில் நீர் நிறைந்துள்ளது.



