இலங்கைவடக்கு மாகாணம்
Trending

வீதி புனரமைப்பில் முறைகேடு – மக்கள் எதிர்ப்பு!

யாழ்.வரணி கரம்பைக் குறிச்சி ஆழ்வார் மடம் வீதியின் புனரமைப்பில் முறைகேடு இடம்பெற்றுள்ளதோடு, தரமற்றதாக அமைக்கப்பட்டுவருவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று(07) தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கரம்பைக்குறிச்சி ஆழ்வார்மடம் வீதியின் புனரமைப்பு 3.5 மில்லியன் ரூபா செலவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படாமல், தரமற்றதாக வீதி அமைக்கப்பட்டு வருவதாக மேற்பார்வைக் குழுவால் உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து சாவகச்சேரி பிரதேச சபையின் கவனத்துக்கு விடயம் கொண்டுவரப்பட்டது.

இருந்தபோதிலும், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் வட்டார உறுப்பினரின் பதில்கள் திருப்தியளிக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று(07) பிற்பகலில் ஒன்று கூடிய பிரதேச மக்கள், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button