
போலியான சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடைக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால், பொரலஸ்கமுவ – வெரஹெர பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 43 மற்றும் 61 வயதுடைய பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்தார்களாவர்.
Follow Us



