
யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோயால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவற்குழி ஜயனார் கோயிலடி புதிய குடியேற்றத்தை சேர்ந்த 23 வயதுடைய இராசநாயகம் ஐவில் என்ற இளைஞரே எலிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்தநிலையில், அவர் நேற்று(12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Follow Us



