மாணவர்கள் கடந்த மாத பருவகால சீட்டை இம் மாதமும் பயன்படுத்தலாம்!

பாடசாலை செல்லும் மாணவர்கள் நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

Exit mobile version