உலகம்பிரான்ஸ்
Trending

மன்னிப்பு கோரிய பிரான்ஸின் முதல் பெண்மணி!

பிரான்ஸின் முதல் பெண்மணி, தான் பயன்படுத்திய மோசமான வார்த்தையால் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்குவது என்பது பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியும், பிரான்ஸின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரானுக்கு (72) இது புதிய விடயமல்ல.

சமீபத்தில், தான் பயன்படுத்திய மோசமான வார்த்தைக்காக சர்ச்சையில் இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட் சிக்கினார்.

2021ஆம் ஆண்டு, பிரெஞ்சு நடிகரும், நகைச்சுவையாளருமான Ary Abittan (51) என்பவர் தன்னை வன்புணர்ந்ததாக அவர் மீது இளம்பெண்ணொருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மூன்று ஆண்டுகள் வழக்கு விசாரணைக்குப் பிறகு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தப் பெண் மேல்முறையீடு செய்தும் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்று நடத்துவதற்காக பாரீஸிலுள்ள தியேட்டர் ஒன்றிற்கு வந்திருந்த Abittan ஐ பிரான்ஸின் முதல் பெண்மணி பிரிஜிட் சந்தித்தார்.

Abittan நிகழ்ச்சிகள் நடத்தும்போது, வன்புணர்வுக்கெதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களான பெண்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்புவதுண்டு.

இந்த நிலையில், அன்றைய தினமும் Abittan பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் அந்த சமூக ஆர்வலர்கள் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தன்னை தனிப்பட்ட முறையில் சந்தித்த பிரிஜிட்டிடம், அந்த பெண்கள் தன் நிகழ்ச்சியின்போது தொல்லை கொடுக்கலாம் என தான் பயப்படுவதாக Abittan
தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த பிரிஜிட், மோசமான வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தி, அந்த மோசமான பெண்கள் இங்கு வந்திருப்பார்களானால்நாம் அவர்களை வெளியேற்றுவோம் என்று கூறியுள்ளார்.

அவர் Abittan உடன் பேசும் இந்த காட்சி ஊடகம் ஒன்றின் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.

கடும் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, தான் பயன்படுத்திய வார்த்தைக்காக பிரிஜிட் தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நிலையில், ‘பாதிக்கப்பட்ட பெண்களை நான் காயப்படுத்தியிருப்பேனானால், அதற்காக நான் வருந்துகிறேன்’ என்று பிரிஜிட் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button