இலங்கை
Trending

அனர்த்த நிவாரணத்துக்கு ஒரு மில்லியன் ரூபா வழங்கிய கணேதாஸ்!

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உருவாக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.சண்முகதாஸின் சகோதரர் கணேதாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நிதி வைப்பிலிட்ட ஆவணத்தை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயனிடம் இன்று (19) கையளித்தார்.

குறித்த நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் சு.மோகனதாஸின் சகோதரன் சு.கணேதாஸ்,ஒரு மில்லியன் ரூபா நிதியை நிதியத்தின் கணக்குக்கு வைப்புச் செய்துள்ளார்.

அதற்கான ஆவணமே ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. அதனையடுத்து அந்த ஆவணத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button