
தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி தலைமை இடம்பெற்ற கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன், அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


இதன்போது பிரதேச செயலத்தை அமைப்பதற்கான 20 பரப்புக்கு மேற்பட்ட காணிகளை வழங்குவதற்கு நான்கு நன்கொடையாளர்கள் முன்வந்தனர்.
மேலும், நன்கொடையாளர்கள் காணிகளை வழங்குவதற்கு முன்வருவதற்கான திகதி இம்மாதம் 31ஆம் வரை வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வழங்க முன்வருபவர்களுடைய காணிகளிலிருந்து பொருத்தமான காணியை தெரிவு செய்து அவ்விடத்தில் பிரதேச செயலகத்தை அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்படும் என இன்றைய கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
Follow Us



