
யாழ்.தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐவரும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று(21) காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


அதன்போது ,சிவகுரு ஆதீன குருமுதல்வர் வேலன் சுவாமிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வலி வடக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர், ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.


அதனைத் தொடர்ந்து மல்லாம் பதில் நீதவான் காயத்திரி அகிலன் முன்னிலையில் ஐவரும் முற்படுத்தப்பட்டனர்.
அதன்போது
ஐவரையும், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததோடு, வழக்கை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Follow Us



