இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவுற்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று (23) இடம்பெற்றது.

அனர்த்தத்திற்கு பின்னர் இலங்கையைக் மீளக்கட்டியெழுப்பும் பணிகள் இடம்பெற்றுவரும் தருணத்தில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாக அமைந்துள்ளது.

சந்திப்பின்போது
‘இலங்கையில் புகையிரதப் பாதைகள், பாலங்களை மீள புனரமைத்தல், விவசாயத் துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு இந்தியா வழங்கிவரும் பங்களிப்பு தொடரும் என்பதையும் வெளிவிவகார அமைச்சர் உறுதிசெய்தார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் Puneet Agrawal ஆகியோரும்,

இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாணிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சமந்த பத்திரண மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டயானா பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version