நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முல்லைத்தீவு குமுளமுனை கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று(23) உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

புலம்பெயர் தேசத்திலும்,தாயகத்திலும் வாழ்ந்துவரும் குடத்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்களால் இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கிராம அலுவலரின் தெரிவின் அடிப்படையில் 100 குடும்பங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், குமுளமுனை கிழக்கு கிராம உத்தியோகத்தர், கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் குடத்தனை வடக்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்!
யாழ்.மாவட்ட செயலக புதுவருட கடமைகள் ஆரம்பம்!
ஜெஹான் பெர்னாண்டோவுக்கு 09 வரை விளக்கமறியல்!
தற்கால பெண்ணியமும், சவால்களும்!