40ஆவது கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!

40ஆவது கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.

சவூதி ப்ரோ லீக் தொடரில் அல்-நஸர் மற்றும் அல் அக்டௌத் அணிகள் நேற்று முன்தினம் (27) மோதின.

கிறிஸ்டியானோ ரொனால்டோ 31 மற்றும் 45+3வது நிமிடங்களிலும், ஃபெலிக்ஸ் 90+4வது நிமிடத்திலும் கோல்கள் அடிக்க அல்-நஸர் அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஐரோப்பாவை விட்டு வெளியேறிய பிறகு, அவர் தொடர்ச்சியாக 3ஆவது சீசனாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன்மூலம், அதிக முறை ஓர் ஆண்டில் 40 கோல்கள் அடித்த வீரர் என்ற லியோனல் மெஸ்ஸியின் இமாலய சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.

மெஸ்ஸி 13 முறை 40 கோல்கள் அடித்த நிலையில், ரொனால்டோ 14வது ஆண்டாக அதனை முந்தி சாதனை படைத்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்த இடங்களில் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (9), கிலியன் எம்பாப்பே (5), ஹாரி கேன் (5), எர்லிங் ஹாலண்ட் (5) ஆகியோர் உள்ளனர்.

Exit mobile version